சின்ன வயசுலயே கவிதை எழுதற கெட்ட பழக்கம் தொத்திக்கிச்சு... கவிதைங்கறது டி.ராஜேந்தர் வசனம் இல்லைனு புரிஞ்ச உடனே அதை ஸ்டாப் பண்ணிட்டேன்...
பதினெட்டு வருசமா பூட்டி வச்சு இருந்த ரகசியம்... டைரி நைஞ்சு கிழிஞ்சு போற நிலைமைக்குப் போயிட்டதால, வெளியே வந்துடுச்சு... நேரம் கிடைக்கும் போதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா வெளிய வரும்...
விடாது கருப்பு...
Tuesday, January 6, 2009
Saturday, January 15, 2000
கருவுக்குள் உருவாகி - என்கனவுக்குள் நிழலாடும் கண்ணே!
நீ எனக்கு மகனோ, மகளோ
நானறியேன்
இரண்டுக்கும் வேற்றுமை அதிகமில்லை
நீ மகளென்றால்
இருபது வயதில் பிரியப் போகிறோம்
மகனென்றாலும்
இருபது வயதில்...
அப்படித்தான் தோன்றுகிறது எனக்கு
நீ தூங்கும் போது தோளும்
நடக்கும் போது விரலும்
வளரும் போது பரிவும்
வளர்ந்த பின்பு பணமும் -
தந்தபினு மிச்சம் மீதி
இருப்பது என் அன்பு மட்டுமே
ஆனால் உனக்கு அது
தேவைப்படுகா எனத்
தெரியவில்லையே எனக்கு
Sunday, March 1, 1992
தீக்குச்சியின் காதல் கவிதை
உனக்கென்ன...
நீ பாட்டுக்கு
உரசிவிட்டுப் போய்விட்டாய்
இங்கே கிடந்து
எரிவது நானல்லவா?
நீ பாட்டுக்கு
உரசிவிட்டுப் போய்விட்டாய்
இங்கே கிடந்து
எரிவது நானல்லவா?
Monday, February 3, 1992
புனிதமான புதிர்
கோடைநீராய் தேகம் தொட்டுஎன் இதயத்தைத்
துடிக்க வைப்பவளே
துடியிடையில் தூண்டில் போட்டு
என் இதயத்தைத்
துடிக்க வைப்பது ஏன்?
நூலிடை ஆகத்தை
மேலுடை பாகத்தால் மறைத்து வைக்கும்
பெண்ணே!
நிர்வாணம் புனிதம்.
மாசுபட்ட கண்களால்
புனிதம்
மாறுபடக் கூடாது.
அதற்கே ஆடைகள்.
சுளைப்பலா சுவையே!
கலைமிகு சிலையே!
வா,
மாசிலா அறையில்
மன்னவன் அருகில்
மேடை வேகத்தைக் குறைத்து
வாடை மேகத்தைக் கரைத்து
காதல் தாகத்தைத் தணித்து
இளமை ராகத்தை இசைக்கு
ஆடை மோகத்தைத் துறந்து
புனிதமாகு;
மற்றொரு புனிதத்திற்கு வழிகாட்டு.
Sunday, January 19, 1992
பெண்+காமம்+கணிதம் = கவிதை

கருமேகம் எழுந்ததடி - உந்தன்
இருங்குழலில் எழுந்ததடி
செந்நுதலில் முத்தமடி - உனை
வேண்டுகிறேன் நித்தமடி
மான்விழிகள் மின்னுதடி - ஒரு
மீன்வலையைப் பின்னுதடி
நாசியினின் காற்றுவடி - என்
பசியினது ஊற்றுவடி
பஞ்சனைய கன்னமடி - அதைக்
கெஞ்சுகுது எண்ணமடி
இதழினின்று தேனியடி - அது
உறிஞ்சுகுது தேனையடி
தேனிபோல நானுமடி - அதில்
தேன்முகந்தான் நாணுமடி
சங்கினைக் கை வளைக்குதடி - நம்
தங்குலகைக் கலைக்குதடி
மலர்க்கரங்கள் தழுவுதடி - மனக்
கலக்கமெல்லாம் நழுவுதடி
கவிழ்த்துவைத்த கவளமடி - அதன்மேல்
கவின்மிகுந்த பவளமடி
பட்டுத்துணி தீண்டுதடி - பட்டு
விளையாடத் தூண்டுதடி
மென்தகடு தாக்குதடி - மனம்
மஞ்சமாக கேக்குதடி
ஏற்றமிகு எழுச்சியடி - அதில்
தோற்றிடுது கவர்ச்சியடி
பாதமெனைக் கண்டதடி - உளம்
மாதவத்தை வேண்டுதடி
காலிரண்டும் வாழையடி - நான்
அதன்முன்னே கோழையடி
பனைத்தொடைகள் பட்டதடி - உச்ச
உணர்வுகளைத் தொட்டதடி
புகையொத்த இடைகளடி - என்மேல்
எடுக்கிறது படைகளடி
அஞ்சிறைகள் விரிந்ததடி - மனம்
வெஞ்சிறையில் சேர்ந்ததடி
ஈருடலும் பிணைந்ததடி - நாம்
ஓருயிராய் இணைந்தமடி
அணைகளெல்லாம் உடைந்ததடி - வெள்ளம்
கரைகளெல்லாம் கடந்ததடி
மகரந்தம் சேர்ந்ததடி - சிறு
பிஞ்சொன்று உதிர்ந்ததடி
விடுபட்ட வரிகள் (Edited.. not censored):
கனியில் கிளி தத்துமடி - அதைப்
பருந்து வந்து கொத்துமடி
பருந்து எந்தன் சாதியடி - பின்
கிளியும் நீயும் மீதியடி
சந்தனத்தில் தேகமடி - நான்
மீட்டுகிறேன் ராகமடி
மலரணிகள் பட்டதடி - மனம்
உச்சநிலை தொட்டதடி
படிப்படியாய் இறக்கமடி - அதில்
அடிமனதில் கிறக்கமடி
தடைகளெல்லாம் விலகுதடி - நாம்
கலப்பதினி இலகுவடி
நனவுலகு உடையுதடி - மனம்
கனவுலகை அடையுதடி
மாம்பழத்தில் கன்னமடி - கண்டு
சிதறிடுமென் எண்ணமடி
மொட்டு ஒன்று சிரிக்குதடி - என்
மனதைத்தொட்டுப் பறிக்குதடி
பாலில்பழம் உதித்ததடி - இதழ்
முத்திரையைப் பதித்ததடி
சிரிக்கும் மொட்டைப் பார்த்ததடி - உடன்
உடலெங்கும் வேர்த்ததடி
Saturday, September 7, 1991
About Myself (as on 1991)
| Year | 1991 |
| Height | 150 cm |
| Weight | 35 KG |
| Hobbies | Writing Poems |
| Charactersitics | Anger (?????????), Smiling Often, Little bit pitiness |
| Favourites: | |
| Food | Chapathi, Idly, Parota |
| Language | Tamil |
| Poet | Kannadhasan |
| Actor | Prince of Love 'Kamal Hasan' |
| Actress | Then - Sarojadevi, Now - Kushboo |
| Political Party | Congress |
| Politician | Narasimha Rao |
| Friends | Male: NB (Nirmal Babu), VB, SA |
| Female: Yet to search | |
| Festival | Deepavali |
| Time | Evening |
| Flower | Rose |
| Snacks | Halwa |
| Animal | Dog |
| Historical Personality | veera Sivaji |
| Game | Chess |
| Director | Maniratnam |
| Producer | GV |
| Number | 3 |
| Age | 16 |
Subscribe to:
Posts (Atom)